கடவுள் டெப்பாசிட் செய்த வாழ்நாள் கரன்சி…

கடவுள் டெப்பாசிட் செய்த வாழ்நாள் கரன்சி…

எல்லா உயிரினத்திற்கும் பிறக்கும் போதே ஆண்டவன் வாழ்நாள்களுக்கு தேவையான கரன்சியை அவரவர் அக்கவுண்ட்ல டெப்பாசிட் செய்துடறார். ஆனா நமக்குத்தான் என்ன அக்ககவுண்ட் கரன்சி பேரென்ன, எங்க இருக்குன்னு ஒரு கர்மமும் தெரிஞ்சுக்கிறது இல்ல…   காரணம்  ஹி… ஹி… ஹி… வேறென்ன ” பேசிக்கலி நான் கொஞ்சம் சோம்பேறி ” அதான்.

நானும் நெறைய பேரைக் கேட்டுப் பார்த்துட்டேன். எவ்வளவு டெப்பாசிட், எவ்வளவு செலவு செஞ்சிருக்கோம், மிச்சம் எவ்வளவு ஒண்ணும் தெரிய மாட்டேங்குதய்யா…

அதனால நானே கோபப்பட்டு கடவுள பார்க்க கிளம்பிட்டேன்னா பார்த்துக்குங்களேன்… என்ன ஒண்ணு போகுற வழியிலே குறுக்க ரெயில் ஒண்ணு வந்துடுச்சு… So, ஒரு மணிநேரம் லேட்டாதான்யா போகமுடிஞ்சுச்சு. அங்க சிவராத்திரி முடிஞ்சு ரொம்ப ஜாலியா அங்க இருக்கற எல்லோரோடவும் கண்ணாமூச்சி விளையாடிட்டு இருந்தார்யா.

எனக்கு வந்ததே கடுப்பு… யோவ் என்னய்யா ஏதோ கணக்கு வச்சிருக்கியாம். அந்த கணக்கு எந்த பேங்கலயா வச்சிருக்க… அந்த அக்கவுண் பேர சொல்லுய்யா… எவ்வளவு செலவு பண்ணலாம்னு தெரிஞ்சுக்கணும்னு கேக்கறேன். 

கடவுள் என்ன பாத்து கத்தறார். “அதான்யா நேரம் நீயெல்லாம் என்ன கேள்வி கேட்க வந்துட்டே. ஏற்கனவே வந்ததே லேட். இதுல கேள்வி வேறயா… உன் ரூம் ரெடியாகி ஒரு மணி நேரம் ஆகுது… உள்ள போய் சீட்டு புடிய்யா போய்யா… ” அப்படின்னு கடவுள் சொன்னார்.  

நான் பயந்து போய் ஏதோ புரிஞ்ச மாதிரி இருந்தது. திரும்பி திடீரென ஓடப் பார்க்கிறேன். முடியல. எல்லாமே திறந்துதான் இருந்தது. ஆனா என்னாலே அங்கிருந்து திரும்பி வர முடியவே இல்ல… என்னடானு செக் பண்ணா… வந்த வழிய செக் பண்ணா… என்ன சுத்தி போலீஸ் மக்கள்னு இருக்காங்க… ஆமாய்யா என் கணக்கு முடிஞ்சுதான் நான் மேல வந்திருக்க‍ேன்னு தெரிஞ்சுடுச்சு…

கடவுள் சொன்னார். எல்லா உயிர்க்கும் ஒரே அளவிலான நேரத்தைதான்யா டெப்பாசிட் செய்றேன். அக்கவுண்ட் பேரு நேரம். அது எவ்வளவு இருக்குன்னு தெரியாது… எவ்வளவு செலவு செஞ்சோம்னு தெரியாது… அந்த நேரத்தை சரியா பயன்படுத்தறவங்க வாழ்க்கைல உயர்ந்த நிலைக்கு வருவதும், மற்றவங்க போராடுவதும் இயற்கையோட விதி அப்படின்னார். சரியா பயன்படுத்துறவங்க அம்பானி ஆகுறதும், மற்றவங்க அவங்களுக்கு அடிமையாவது தான் நடக்கும்னு சொன்னர்.

எனக்கு புரிஞ்சது… உங்களுக்கு புரிஞ்சுதா?

புரிஞ்சவங்களெல்லாம் லைக்ஸ் பண்ணுங்க… புரியாதவங்க திரும்பவும் படிங்க…

தியாகு

You Might Also Like